அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் இசையமைப்பாளர் இளையராஜா
அமெரிக்காவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா சென்னை வந்தார்.
சென்னை,
இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றார். இதனால் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை.
இந்த நிலையில், நிகழ்ச்சியை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநிலங்களவை நியமன எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின் முதல்முறையாக சென்னை வந்துள்ளார்.