படப்பையில் காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை மையம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக பகுதியில் காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை மையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-03-06 07:57 GMT

நிகழ்ச்சிக்கு குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமை தாங்கினார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு காளான் வளர்ப்பு மற்றும் விற்பனை மையத்தை திறந்து வைத்தார். இதில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் உமா மகேஸ்வரி வந்தே மாதரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வட்டார வளர்ச்சி அலுவலக பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, கோவலன், கண்ணகி கதை நாடகங்கள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் படப்பை ஊராட்சி மன்ற தலைவர் கர்ணன், மணிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அய்யப்பன், வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன், மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தீபக் (பொறுப்பு) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்