முருகன் கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது

முருகன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.;

Update:2023-09-02 00:18 IST

அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சியில் உள்ள மின் நகரில் உள்ள சித்தி விநாயகர், மாரியம்மன், சுப்பிரமணியர், அய்யனார் கோவில்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தன. இன்று மங்கல இசையுடன் சோம கும்ப பூஜை, கோ பூஜை நடக்கிறது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு யாத்ரா தானம் புறப்பட்டு மூலவர் விமானத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்