முருகன் கோவில் தெப்ப உற்சவம்

முருகன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

Update: 2022-06-13 18:51 GMT

விராலிமலை:

விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் நேற்று விராலிமலை தெற்கு தெருவில் உள்ள தெப்பக் குளக்கரையில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெப்பஉற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் தெப்பக்குளத்தில் இருந்த தெப்பத்தில் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தில் சுற்றி வந்தார். அதன்பின்னர் மயில் வாகனத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்