வாலிபர் படுகொலை
தஞ்சையில் வாலிபரை படுகொலை செய்த மர்மநபர்கள் அவருடைய முகத்தை சிதைத்துவிட்டு சென்றனர்.;
தஞ்சையில் வாலிபரை படுகொலை செய்த மர்மநபர்கள் அவருடைய முகத்தை சிதைத்துவிட்டு சென்றனர்.
வாலிபர் கொலை
தஞ்சை கரந்தை குதிரைக்கட்டி தெருவை சேர்ந்தவர் பிரதீப் (வயது23). இவர் நேற்றுஇரவு வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், பிரதீப் பெயரை கூறி அழைத்தனர். யார் தன்னை அழைக்கிறார்கள் என வீட்டிற்குள் இருந்து பிரதீப் வெளியே வந்தார். அவரை பார்த்தவுடன் மர்மநபர்கள் அவரிடம் ஏதோ பேசுவதை போல் அருகில் வந்தனர்.
அப்போது மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாள் மற்றும் ஆயுதங்களால் பிரதீப்பை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
முகத்தை சிதைத்த மர்மநபர்கள்
இருந்தாலும் ஆத்திரம் அடங்காத மர்மநபர்கள் தாங்கள் வைத்து இருந்த ஆயுதங்களால் அவருடைய முகத்தை சிதைத்தனர். இதனால் உருவமே தெரியாத அளவுக்கு அவரது முகம் சிதைந்துவிட்டது. பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பிரதீப் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பிரதீப்பை கொலை செய்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது.