காந்தி சிலைக்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
காந்தி ஜெயந்தி விழாவையொட்டி காந்தி சிலைக்கு முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.;
சோளிங்கரில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் நகர தலைவர் கோபால் தலைமையில் தபால் அலுவலகத்துக்கு எதிரே உள்ள காந்தி சிலைக்கு ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையத்துக்கு சென்ற கட்சியினர் அங்கு காமராஜர் நிைனவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.