சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி கூட்டம் நடந்தது.;

Update:2022-05-25 19:34 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம், தலைவர் உமாமகேஸ்வரி சரவணன் தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் ரவிசந்திரன், நகராட்சி பொறியாளர் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கரன்கோவிலில் வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள ஆடித்தபசு விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தலைவர் உமாமகேசுவரி சரவணன் தெரிவித்தார். கூட்டத்தில் சுகாதார அலுவலர் பாலச்சந்தர், நகராட்சி மேலாளர் மாரியம்மாள், தேர்தல் பிரிவு உதவியாளர் முருகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்