பேரூராட்சி கூட்டம்

சேரன்மாதேவி பேரூராட்சி கூட்டம் நடந்தது;

Update:2022-09-30 03:05 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற இருப்பதாக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து கவுன்சிலர்களும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். இந்த நிலையில், செயல் அலுவலர் கலந்தாய்வில் இருப்பதாக கூறி கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்தில் தொடங்காமல் இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எப்போது கூட்டம் நடைபெறும் என அதிகாரிகளிடம் கேட்டதற்கு, கலந்தாய்வு முடிந்தவுடன் நடத்தப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மாரிச்செல்வம் உள்ளிட்ட 6 பேர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கிளம்பி சென்றனர்.

தொடர்ந்து சிறிது நேரத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் தேவி அய்யப்பன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரன், துணைத்தலைவர் மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அன்வர் உசேன், முருகன் ரவிச்சந்தர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்