பருவ மழைக்கு முன் பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாக செயலாளர் உத்தரவு

மடிப்பாக்கம், புழுதிவாக்கத்தில் பருவ மழைக்கு முன் பணிகளை முடிக்க நகராட்சி நிர்வாக செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டு உள்ளார்.;

Update:2023-06-25 23:00 IST

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள், புழுதிவாக்கம் சீனிவாசன் நகர் மெயின் ரோடு, ராம் நகர் ஆகிய பகுதிகள் மழைநீர் வடிகால்வாய்கள் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நடப்பதால் சமீபத்தில் பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மடிப்பாக்கத்தில் பருவ மழைக்கு முன் பாதாள சாக்கடை, குடிநீர் பணிகள் முடிக்க உத்தரவிட்டார். உள்ளகரம், புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பணிகளை விரைவில் செய்யப்படும் என்றார். மாநகராட்சி தெற்கு துணை கமிஷனர் அமீத், தலைமை பொறியாளர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் முருகன், செயற்பொறியாளர் முரளி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெ.கே.மணிகண்டன், ஸ்டெர்லி ஜெய் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்