பல்நோக்கு மருத்துவ முகாம்
கவுந்தப்பாடியில் நடந்த பல்நோக்கு மருத்துவ முகாமை மாவட்ட கலெக்டர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டார்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசின் பல்நோக்கு மருத்துவ முகாம் நடந்தது.முகாமை சப்-கலெக்டர் (பயிற்சி) காயத்திரி தொடங்கிவைத்தார். பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம். பல்மருத்துவம், சித்த மருத்துவம், தோல் நோய் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு, தொண்டை மருத்துவம், பெண்கள் நல மருத்துவம் என பல்வேறு மருத்துவ பிரிவுகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஸ்கேன், ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கண்புரை பரிசோதனை என பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பார்வையிட்டு சித்த மருத்துவ பிரிவில் வழங்கிய கபசுர குடிநீரை குடித்தார். முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.