ரூ.10 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம்; பழனி நாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
பாவூர்சத்திரம் அருகே பூவனூரில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட உள்ள பல்நோக்கு மைய கட்டிடத்துக்கு பழனி நாடார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
பாவூர்சத்திரம்:
கீழப்பாவூர் யூனியன் திப்பணம்பட்டி பஞ்சாயத்து பூவனூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் தலைவர் சீ.காவேரி தலைமை தாங்கினார். துணை தலைவர் முத்துக்குமார், மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், யூனியன் கவுன்சிலர் மேரிமாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.பழனிநாடார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ஐவராஜா, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர் குமார் பாண்டியன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.