முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிப்பு

பாளையங்கோட்டையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2023-05-18 18:59 GMT

இலங்கையில் தமிழீழ தனிநாடு வேண்டி போராடி வந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது. அப்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் வெள்ளைக்கொடி ஏந்தி சென்ற விடுதலைப்புலிகளையும், பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தமிழீழ மக்கள் என மொத்தம் 1½ லட்சம் பேரை சிங்களப்படை கொன்று குவித்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை மகாராஜ நகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டது. அந்த படங்களுக்கு த.ம.மு.க. நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர இளைஞரணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் நெல்சன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அப்துல் ஜப்பார், நாம் தமிழர் கட்சி சேரன்துரை, சமூக ஆர்வலர் புல்லட் ராஜா, நேதாஜி சுபாஷ் சேனை நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் பிச்சுமணி, தூத்துக்குடி கிழக்கு மாவட்ட செயலாளர் வசவை கணேசன், தொண்டரணி செயலாளர் சிவன்பாண்டியன், த.ம.மு.க நிர்வாகிகள் டிக்முத்து, பரமசிவ பாண்டியன், முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்