141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை - கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள எச்சரிக்கை..!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 141 அடியை எட்டியது.

Update: 2022-12-14 05:01 GMT

தேனி,

முல்லை பெரியாறு அணை நீர் மூலம் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றனர். அணையின் அமைவிடம் கேரளாவில் இருந்தாலும் பராமரிப்பு பணிகள் முழுவதையும் தமிழகமே மேற்கொண்டு வருகிறது.

152 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிவரை தேக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து தொடங்கியது. நீர்மட்டம் 140 அடியை எட்டியபோது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை 6 மணிக்கு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இடுக்கி மாவட்டத்திற்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியதும், 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படும்.

Tags:    

மேலும் செய்திகள்