முளைப்பாரி எடுப்பு விழா

முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-08-28 18:35 GMT

ஆதனக்கோட்டை:

ஆதனக்கோட்டை அருகே கருப்புடையான்பட்டி கிராமத்தில் செங்குள விநாயகர், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. திரளான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க, குதிரை அலங்காரத்துடன் ஊர்வலமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்