முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம் நடந்தது.

Update: 2023-10-17 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட யானை மீது கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வருகிற 25-ந் தேதி பச்சைகளை ஊர்வலமும், 26-ந் தேதி அரண்மனை கொடி ஊர்வலமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் நடக்கிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவணசமுத்திரத்தில் இருந்து புறப்படுகிறது. 27-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைந்து இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 29-ந் தேதி ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது சலீம், பக்கீர் முகைதீன் மற்றும் பள்ளிவாசல் நிா்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்