முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது..!

முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

Update: 2023-05-11 07:29 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது மின்சார வாகனங்களை உருவாக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ. 15,000 கோடி முதல் ரூ.20,000 கோடி வரையிலான முதலீடுகள் அடுத்த 7-10 ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்