சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவரங்குளம் வட்டார பகுதியில் நாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. புதுக்கோட்டை-ஆலங்குடி மெயின் ரோட்டில் சுற்றித் திரியும் நாய்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.