சுரங்கப்பாதைக்குள் மழைக்கு ஒதுங்கிய வாகன ஓட்டிகள்

பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில் மழை பெய்த போது சுரங்கப்பாதைக் குள் வாகன ஓட்டிகள் ஒதுங்கி நின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-12-13 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சீனிவாசபுரத்தில் மழை பெய்த போது சுரங்கப்பாதைக் குள் வாகன ஓட்டிகள் ஒதுங்கி நின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுரங்கப்பாதை

பொள்ளாச்சி மீன்கரை ரோடு சீனிவாசபுரம் பகுதி வழியாக பொள்ளாச்சி-பாலக்காடு இடையே ரெயில் பாதை உள்ளது. இதில் சீனிவாசபுரத்தில் ரெயில்வே சுரங்கபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் பொள்ளாச்சி பகுதியில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனையாமல் இருப்பதற்காக சுரங்க பாதையின் கீழ் வாகனங்களுடன் நின்றனர்.

இதனால் அந்த ரோட்டில் கார், பஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதற்கிடையே சுரங்கப்பாதைக்குள் மழைநீரும் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் நேற்று இரவு 7 மணிக்கு திடீ ரென்று மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் பல்லடம் ரோடு, கோவை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்ட னர். மழை காரணமாக நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் நேற்று பகலில் வெயில் வாட்டி எடுத்தது.

ஆனால் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அதன்பிறகு நல்லட்டிபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

இதையடுத்து மாலை 6.50 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 40 நிமிடம் மழை நீடித்ததால் ரோட்டில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மழை பெய்ததால் கிணத்துக்கடவு பகுதிகளில் இரவு நேரம் நேற்று குளிர்ச்சி நிலவியது.

மேலும் செய்திகள்