மோட்டார்சைக்கிள்கள் மோதல்; தையல்காரர் பலி

மோட்டார்சைக்கிள்கள் மோதலில் தையல்காரர் பலியானார்.

Update: 2023-08-08 19:29 GMT

நெமிலி

மோட்டார்சைக்கிள்கள் மோதலில் தையல்காரர் பலியானார்.

நெமிலியை அடுத்த புன்னை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 55). தையல் வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனது மனைவி சரோஜாவுடன் (50), நெமிலியில் இருந்து புன்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். புன்னை பஸ் நிறுத்தம் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன், ஆறுமுகம் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி இருவரும் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆறுமுகம் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.

இது குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று நெமிலி கால்நடை மருந்தகம் அருகே நடைபெற்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் விபத்தில் காவேரிப்புரம் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (27) என்பவர் படுகாயமடைந்து காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்