மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு; 2 பேர் கைது

நெல்லை அருகே மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-02 19:15 GMT

நெல்லை அருகே சீவலப்பேரி சிவன்கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகையா ராஜா (வயது 24). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2 வாரத்திற்கு முன்பு அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்றார். அப்போது அவருக்கும் மகாராஜன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மகாராஜனின் தம்பியான சீவலப்பேரி சிவன்கோவில் தெருவை சேர்ந்த பட்டாணி (24) என்பவர் முருகன் (37) என்பவருடன் சேர்ந்து முன்பகை காரணமாக சண்முகையா ராஜா தனது வீட்டின் அருகே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்தனர்.

இதுகுறித்து சண்முகையா ராஜா சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து பட்டாணி, முருகன் ஆகியோரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்