மானூரில் மோட்டார் சைக்கிள் திருட்டு

மானூரில் மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-27 20:48 GMT

மானூர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்து மாரியப்பன் மகன் விக்னேஷ் (வயது 27). இவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்யும் தொழில் செய்கிறார். இவர் தனது அண்ணன் ஹரி ராமகிருஷ்ணன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை வந்தார். பின்னர் சங்கரன்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தபோது, காற்றும், வெயிலும் அதிகமாக இருந்ததால் மோட்டார் சைக்கிளை மானூர் தெற்கு பஸ் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு பஸ்சில் சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில், மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்