டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலியானார்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் கோகுல் பிரசாத் (வயது 26). இவர், விராலிமலை அருகே கொடும்பாளூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று தனது நண்பர் புதுக்கோட்டையை சேர்ந்த முத்துகுமரேசன் என்பவருடன் தனது மோட்டார் சைக்கிளில் காளப்பனூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற தண்ணீர் ஏற்றி செல்லும் டிராக்டர் மீது கோகுல் பிரசாத் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கோகுல் பிரசாத், முத்துக்குமரேசன் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் விராலிமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோகுல் பிரசாத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.