லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மேல்பாடி அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
காட்பாடி தாலுகா மேல்பாடியை அடுத்த முத்தரசிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மகன் அருண்குமார் (வயது 22). இவர் நேற்று மாலை 3 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் சேர்க்காடு பகுதியில் இருந்து சித்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரியில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மேல்பாடி சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த அருண்குமாரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மேல்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.