குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயமானார்.

Update: 2023-01-08 21:05 GMT

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை செபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சவேரியார். இவரது மனைவி மரியா பென்சியா(வயது 22). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த மரியா பென்சியா சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மரியா பென்சியா மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்