ஆண் நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஆண் நண்பர்களுடன் பழகியதை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்.

Update: 2023-06-11 13:41 GMT

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மற்றும் 1½ வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வாலிபர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு சென்ற பிறகு, அவரது மனைவி செல்போனில் பொழுதை கழித்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கிருஷ்ணகிரியை சேர்ந்த 2 வாலிபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கணவர் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுடன் பழகி வருவது தெரிந்தது.

வீடடை விட்டு ஓட்டம்

பலமுறை கண்டித்தும் வாலிபர்களுடன் பழகுவதை இளம்பெண் நிறுத்தவில்லை. இதனால் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோலார்பேட்டையில் உள்ள தனது மாமியாரை வரவழைத்து அவருடன் மனைவி மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி தனது பிள்ளைகளை அம்மாவிடம் விட்டுவிட்டு, வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்ற இளம்பெண் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அக்கம், பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

போலீசார் மீட்டனர்

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஓசூரில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை அழைத்து வந்து, பெற்றோர் மற்றும் கணவரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி தாயுடன் அவரை அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்