பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்த தாய்: பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Update: 2024-06-27 23:17 GMT

கோவை,

கோவை மலுமிச்சம்பட்டி ஒக்கிலிபாளையம் சாலையை சேர்ந்தவர் பழனிமுருகன். இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மூத்த மகன் முத்துகிருஷ்ணன் (வயது 17). இவன் மலுமிச்சம்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தான். முத்துகிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய தாயார் கண்டித்ததுடன், பள்ளிக்கு செல்லுமாறு அறிவுரை கூறியுள்ளார். இதனால் மாணவன் மனமுடைந்து காணப்பட்டான்.

சம்பவத்தன்று பழனிமுருகன் மற்றும் அவருடைய மனைவி வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். இளைய மகளும் பள்ளிக்கு சென்றுவிட்டார். இதனால் முத்துகிருஷ்ணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். மாலை இளைய மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, முத்துகிருஷ்ணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த செட்டிப்பாளையம் போலீசார், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கு செல்லுமாறு பெற்றோர் கண்டித்ததால் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்