மது அருந்தியதை மகன்கள் கண்டித்ததால் தாய் தற்கொலை

மது அருந்தியதை மகன்கள் கண்டித்ததால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-17 19:45 GMT

பரமத்திவேலூர்:-

சேலம் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி குட்டை தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சரோஜா (வயது 48). கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை அவருடைய மகன்கள் கண்டித்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன சரோஜாவை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

இதற்கிடையே அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு பின்புறம் உள்ள கிணற்றில் சரோஜா பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த சரோஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரோஜா கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்