சேலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு மோர்

Update: 2023-03-01 19:30 GMT

கோடை காலம் தொடங்கிய நிலையில் சேலம் மாநகரில் பணியாற்றும் 110 போக்குவரத்து போலீசாருக்கு மோர் அல்லது லெமன் ஜூஸ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடக்க நிகழ்ச்சி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர்கள் மாடசாமி, லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டு போக்குவரத்து போலீசாருக்கு மோர் மற்றும் தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தனர்.

மேலும் அவர்களுக்கு தொப்பியும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயவேல், ராஜராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ச்சியாக 4 மாதங்கள் ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்