மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம்

மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

Update: 2023-06-27 21:30 GMT

குன்னூர்

குன்னூர் அருகே நான்சச் தோட்ட தொழிலாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தேயிலை தோட்டங்களை ஒட்டி வனப்பகுதி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடி வருகிறது. அங்குள்ள தேயிலை தொழிற்சாலை அருகே மின் கம்பத்தில் குரங்கு நின்று இருந்தது. அப்போது குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் குரங்கு கீழே விழுந்து படுகாயம் அடைந்தது. தகவல் அறிந்த குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குரங்கை பிடித்து கூண்டில் பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் வனத்துறையினர் கண்காணிப்பில் குரங்கு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்