குடிமங்கலம்
குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தென்னை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வனப்பகுதியில் இருந்து தப்பி வந்த குரங்கு குடிமங்கலம் பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் கடைகள், பேக்கரிகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது.
குரங்கு இப்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்களில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியும். எடுத்தும் செல்கிறது. எனவே வனத்துறையினர் குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்கை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.