சிவகாசி,
சிவகாசி உசேன் காலனியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 36). இவர் என்.ஆர்.கே.ஆர். ரோட்டில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு சென்றவர் அடுத்த நாள் காலையில் கடைக்கு வந்தார். அப்போது கடையின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பிரசாத் கடையின் உள்ளே சென்று பார்த்த போது ரூ.14 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்து தெரியவந்தது. இதுகுறித்து அருண்பிரசாத் அளித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.