அதிகம் சம்பாதிக்கலாம் என கூறிவாலிபரிடம் ரூ.18¼ லட்சம் மோசடி
அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி சேலத்தில் வாலிபரிடம் ரூ.18¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்
சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் குறைந்த அளவு பணம் செலுத்தினால், அதிகம் சம்பாதிக்கலாம் என்று இருந்தது. அதை நம்பி அவர் பல தவணைகளில் ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் கட்டிய பணம் வரவில்லை. இதனால் மோசடி நடந்தது தெரிந்தது. இந்த மோசடி குறித்து அவர் சேலம் நகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோசடி செய்யப்பட்ட பணம் பீகார், அரியானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிளுக்கு சென்று இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பணத்தை உரியவர் வங்கி கணக்கில் சேர்க்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.