ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டரூ.8 லட்சம் கண்டுபிடிப்புசைபர் கிரைம் போலீசார் தகவல்

ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.8 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சேலம் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Update: 2023-10-11 20:38 GMT

சேலம்

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஆன்லைன் மூலம் பணம் கட்டினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று இருந்ததை நம்பி அவர் ரூ.8 லட்சத்து 7 ஆயிரத்து 952 அனுப்பினார். சில நாட்களுக்கு பிறகு குறுஞ்செய்தி வந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதனால் பணம் மோசடி நடந்து இருப்பது தெரிந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. மோசடி செய்யப்பட்ட பணம் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு சென்று இருப்பது தெரிந்தது. அந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரப்படுகிறது. எனவே இது போன்று அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இந்த தகவல் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்