மாண்டஸ் புயல்: அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மாண்டஸ் புயல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Update: 2022-12-09 15:36 GMT

சென்னை,

சென்னை அருகே 130 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது மாண்டஸ் புயல். மாமல்லபுரத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கையாக நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகமும் டிப்ளமோ தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கமும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்