ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்கள் மீட்பு

திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன மற்றும் தவறவிடப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்களை போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Update: 2022-06-29 17:37 GMT


திருவாரூர் மாவட்டத்தில் திருட்டுப்போன மற்றும் தவறவிடப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான 75 செல்போன்களை போலீசார் மீட்டனர். இந்த செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

செல்போன்கள் திருட்டு

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயணங்களின் போதும், திருவிழாக்களின் போதும் தவறவிட்ட மற்றும் திருட்டுப்போன செல்போன்களை கண்டுபிடித்து தர அதன் உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் போலீசாரின் துரித நடவடிக்கையால் திருட்டு மற்றும் காணமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டது.

உரியவர்களிடம் ஒப்படைப்பு

இந்தநிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மீட்கப்பட்ட செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கி ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 75 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். அப்போது அவர், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் திருட்டு, பொருட்களை தவற விடுவது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும். பொதுமக்களுக்கு உதவ போலீசார் தயாராக உள்ளனர் என கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்