பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? - வெளியான பரபரப்பு தகவல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ந்தேதி வெளியானது. தேர்வு முடிவுகளுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வெழுதியவர்களில் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விருப்பமுள்ளோர், விண்ணப்பித்தனர். இதன் மூலம் விடைத்தாள்களை பெற்ற மாணவர்கள் மூலமாக விடைத்தாள்கள் மதிப்பீட்டில் குளறுபடிகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
அதில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை விட கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக 5 முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வை பொறுத்தவரை ஒவ்வொரு மதிப்பெண்களும் வேளாண்மை, கலை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி படிப்புகள் சேர்க்கையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தேர்வுத்துறை விசாரணையில் ஈடுபட்டுள்ளது.