சிறுபான்மையினர் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்

சிறுபான்மையினர், கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

Update: 2023-05-27 21:36 GMT

சிறுபான்மையினர், கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.

தனிநபர் கடன்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விகடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் கடன் உதவிபெற விண்ணப்பிக்கலாம். திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

அதன்படி தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்கள் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

மாணவ -மாணவிகள்

சுய உதவிக்குழு கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 10 பேர் முதல் 20 பேர் வரை ஒருவருக்கு ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் 10 பேர் முதல் 20 பேர் வரை ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மையின மாணவ -மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி படிப்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் 3 சதவீத வட்டிவிகிதத்தில் ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

ஆவணங்கள்

எனவே ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவுவங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வருமான சான்றிதழ், உணவு பங்கீடு அட்டை, இருப்பிடச்சான்றிதழ், கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளிக்கூட மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்