ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு
கொள்ளிடம் அருகே ரேஷன் கடையில் அமைச்சர் ஆய்வு
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆற்றின் கரையோரப் பகுதிகளில் 16 கோடியில் பேரிடர் மீட்பு மையங்கள் அமைய உள்ள இடத்தினை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் சென்றபோது சாலையோரம் காத்திருந்த அனுமந்தபுரம் கிராம மக்கள் தங்களுக்கு ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். அங்கே பொது மக்களுக்காக வழங்க வைக்கப்பட்டிருந்த அரிசியை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் தரமற்ற அரிசிகளை இனிவரும் காலங்களில் வழங்கக் கூடாது எனவும் தரமான அரிசியை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் ரேஷன் கடை ஊழியரை எச்சரித்து அறிவுறுத்தினார்.