ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.;

Update:2023-10-09 15:28 IST

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 6 மணியளவில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிறை அதிகாரிகள் அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. சிறப்பு மருத்துவக்குழுவினரும் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கண்காணித்தனர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இன்று பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, மீண்டும் புழல் சிறைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்