மாசி மக திருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

திட்டக்குடியில் மாசி மக திருவிழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.

Update: 2023-03-05 19:34 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடியில் பிரசித்தி பெற்ற அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மாசிமக விழா இன்று(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து, உற்சவர் திட்டக்குடி வெள்ளாற்றுக்கு ஊர்வலமாக சென்று, அங்கு மகா தீபராதனை நடைபெறுகிறது. பின்னர் அங்கிருந்து மீண்டும் கோவிலுக்கு சாமி புறப்பாடு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மாசிமக விழவையொட்டி, வெள்ளாற்றில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, தூய்மை பணிகள், பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆய்வின் போது தாசில்தார் ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு காவியா, திட்டக்குடி நகர மன்ற தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணைத் தலைவர் வி.பி.பி. பரமகுரு, நகராட்சி ஆணையர் ஆண்டவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனி பாபு, மங்களூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், தி.மு.க. நகர துணை செயலாளர் செந்தில்குமார், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. மன்னன், நகராட்சி வார்டு கவுன்சிலர் சுரேந்தர், கண்மணி, மஞ்சு, உமாசங்கர், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் இளங்கோவன், சேதுராமன், விக்னேஷ் வி.பி. பாலமுருகன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்