கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி

கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அஞ்சலி செலுத்தினார்

Update: 2023-01-25 19:34 GMT

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் பர்மா காலனியை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ஜெகன்நாத் (வயது 10). இவர் காட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூங்கா அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதை அறிந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி நேற்று மாணவர் ஜெகன்நாத் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். அப்போது, கிழக்கு மாநகர தி.மு.க. செயலாளர் மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதேபோல் அமைச்சர், தனது சொந்த ஊரான கீழன்பில் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மை, மாணவர்களின் கற்றல் திறன், ஆய்வகத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளியின் மேம்பாட்டிற்கான கோரிக்கைகளை கேட்டறிந்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்கள் அரசு பொதுத்தேர்வை அச்சம்இன்றி மேற்கொள்ள வேண்டும். நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள், உங்களுடைய கல்வி தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்ய முதல்-அமைச்சர் காத்திருக்கிறார் என அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்