சாலையில் சுற்றித்திரிந்த மிளா

விக்கிரமசிங்கபுரம் அருகே சாலையில் சுற்றித்திரிந்த மிளாவை வனத்துறையினர் வனப்பகுதியில் விரட்டினர்.;

Update:2023-10-16 00:30 IST

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள மில்கேட் அடிவாரம் பகுதியில் நேற்று மாலையில் தெற்குகோடை மேல் அழகியான் கால்வாயில் ஆண் மிளா ஒன்று தண்ணீர் குடித்துவிட்டு அங்குள்ள சாலையில் சுற்றித்திரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து பாபநாசம் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மிளாவை அங்கிருந்து பத்திரமாக திருப்பதியாபுரம் அருகே வனப்பகுதிக்கு விரட்டி விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்