தில்லை காளியம்மன் கோவிலில் பால்குடம்

செம்பனார்கோவில் அருகே மேலப்பாதியில் தில்லை காளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா

Update: 2023-04-06 18:45 GMT

பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் தில்லை காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஆண்டு குடமுழுக்கு நடந்தது. குடமுழுக்கு முதலாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி திரளான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் விரதம் இருந்து தங்களின் நேர்த்திக்கடனை நிறைவு செய்யும் வகையில் காவிரி கரையிலிருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பச்சைகாளி, பவளக்காளி நடனத்துடன் பால்குடம் எடுத்துவந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி காவடியை சுமந்து முக்கிய வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு பல்வேறு மூலிகை கொண்டு பூர்ணஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து வைக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து ஸ்ரீ தில்லை காளியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்