பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கூட்டம்

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கூட்டம் நடந்தது

Update: 2023-08-04 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்திர சிறப்பு பேரவை கூட்டம் திருப்புவனத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார். சரக முதுநிலை ஆய்வாளர் (பால்வளம்) ராமச்சந்திரன், விரிவாக்க அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மேலாளர் கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் துணை தலைவர் பழனியம்மாள், இயக்குனர்கள் ஆதிமூலம், நாச்சி, பரமசிவம், தாமோதரகண்ணன், பிச்சை, முருகேஸ்வரி, ராமேஸ்வரி மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சங்கத்தின் வரவு-செலவு அறிக்கை வாசிக்கப்பட்டும், பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் இயக்குனர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்