படபத்திரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

படபத்திரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

Update: 2022-05-28 16:40 GMT

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் வெண்மணச்சேரி தென்பாதியில் படபத்திரகாளியம்மன் மற்றும் முதலியப்பர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி உற்சவத்தையொட்டி கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பக்தர்கள் பால்குடம், ரதகாவடி, அலகுகாவடி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊர்வலம் கோவிலை வந்தடைந்ததும் சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் வெண்மணச்சேரி கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்