பால் விலை உயர்வு - பாஜக போராட்டம் அறிவிப்பு

ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தியிருக்கிறது.

Update: 2022-11-07 13:04 GMT

சென்னை,

மனிதனின் அன்றாட சத்து தேவையை நிறைவு செய்வதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக அளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஒட்டுமொத்த உலக பால் உற்பத்தியில் இந்தியா 21 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனம் 'பிரீமியம்' (ஆரஞ்சு) பாலை ஒரு லிட்டர் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக (ரூ.12 உயர்வு) உயர்த்தியிருக்கிறது. பச்சைநிற பால் பாக்கெட் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் கருத்து ஆவின் நிறுவனம் அறிவித்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள், டீக்கடைக்காரர்கள், பால் முகவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், பால் விலை உயர்வு கண்டித்து பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 1,200 ஒன்றியங்களில் வரும் 15ம் தேதி ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் என பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்