பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம்

10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாலை கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-07-16 01:00 GMT

சுல்தான்பேட்டை

கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பன, உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடந்த 5-ந் தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையம் கிராமத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நேற்று நடந்த 11-வது நாள் போராட்டத்திற்கு உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கனகவேல் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கோவை மாவட்ட செயலாளர் வேலு.மந்தராசலம் முன்னிலை வகித்தார். இதில் துணைத்தலைவர் ஈஸ்வரசாமி, மாநிலச்செயலாளர் ஜெகதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்