பால்குட ஊர்வலம்

திருக்கோவிலூரில் பால்குட ஊர்வலம்;

Update:2023-02-05 00:15 IST

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ. நகரில் விநாயகர் கோவில் வளாகத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 8-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏராளமான பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். முடிவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்