திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கோட்டையிருப்பில் கும்மங்குடி அய்யனார், கோச்சடை காளியம்மன் கோவிலில் 20-ம் ஆண்டு பால்குட விழா நடந்தது. இதை முன்னிட்டு கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுக்கப்பட்டு பதினெட்டாம்படி கருப்பர் கோவில் வீட்டுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு, அங்கிருந்து கோச்சடை காளியம்மன், கும்பங்குடி அய்யனார் கோவிலுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும், சந்தனம், திருமஞ்சனம், தயிர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்பு முனீஸ்வரர், பெரிய கருப்பர், சின்ன கருப்பர், பைரவர், ராக்காச்சி, பேச்சி, சோனையன், முத்தையன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.