பாபநாசம் தாமிரபரணியில் தண்ணீர் அருந்த வந்த மிளா

பாபநாசம் தாமிரபரணியில் தண்ணீர் அருந்துவதற்கு மிளா வந்தது.

Update: 2023-05-24 19:34 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் சித்தர்கள் கோட்டம், பாபநாசம் தாமிரபரணி தீப ஆரத்தி குழு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றை தினமும் தூய்மை செய்து வருகின்றனர். மேலும் பொக்லைன் எந்திரம் உதவியுடன் டன் கணக்கில் கழிவுகளை தீவிரமாக அகற்றி வருகின்றனர். மேலும் குறைந்தளவு தண்ணீர் செல்வதாலும், கழிவுகளை அகற்றுவதாலும் ஆற்றில் சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. இந்த நிலையில் பாபநாசம் முக்கூடல் எதிரே தாமிரபரணி ஆற்றுக்கு வனப்பகுதியில் இருந்து வெளிேய வந்த மிளா, ஆற்று நீரை நுகர்ந்து பார்த்த மிளா துர்நாற்றம் வீசியதை கண்டு, தண்ணீரை அருந்தாமலே சென்றது. மேலும் இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்